Saturday, June 20, 2009

நீர் தூவும் செவ்வானம்..




யாழ் மீட்டும் இசையோடு செவ்வானில்
உலவும் மின்னல் மேகத்தில்
தாவி திரியும் ஒளியின் ஊற்றோடு
இன்று தன்னை விட்டு பிரிகின்ற
ஒரு நீர்த்துளியின் வன்மம் கண்டு
பிரபஞ்சத்தின் ஒரு மூலையில்
அழுகையாய் தொடங்கும் மழை..

மழை விட்டு பிரிந்தும்

வன்மம் மாறாத பிரபஞ்சம்
தன் அங்கத்தின் தக்கையாம் பூமியின் கோளத்தில்
இன்றும் சில நேரம் குரோதம் காட்டும் இயற்கையின் பேரழிவால்..

தன் மீது வான் மழை தூவி

வலம் வருகிறாள் மழை நங்கை
என்று பூரிப்புடன் முகம் காட்டும் பூமி..
கடைசியில் சேரப்போவது இங்கு தான் என்று
வில்வையின் இச்சை அடங்கமால் சிரிக்குமாம் கடல்..

27 comments:

  1. // தன்னை விட்டு பிரிகின்ற
    ஒரு நீர்த்துளியின் வன்மம் கண்டு
    பிரபஞ்சத்தின் ஒரு மூலையில்
    அழுகையாய் தொடங்கும் மழை..//

    எப்படி தெரியுமா இருக்குது!
    பாக்கெட்ல இருந்து ஒரு ரூபா காணாம போச்சுன்னு ஒருத்தன் எல்லா காசையும் தூக்கி வீசிட்டானாமாம்

    ReplyDelete
  2. ஏன், இதன் பிறகு எழுதல!

    ReplyDelete
  3. pramatham , niraya eluthungal .
    vivek

    ReplyDelete
  4. நல்லா வந்திருக்குங்க..

    ReplyDelete
  5. கலக்கல்,

    தொடருங்கள், நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  6. நல்லா இருக்கு :))

    ReplyDelete
  7. satrum pisirillaatha azhagaana kavithai
    ithuthaan puriyalai thappa ninaikka vendaam
    naan tube light
    வில்வையின் இச்சை அடங்கமால் சிரிக்குமாம் கடல்
    vilvam maram thaane? athukkum kadalalukkum
    enna thodarbu? pls sollungalean

    ReplyDelete
  8. வில்வை மட்டுமா

    இச்சை கொண்டுள்ளே எல்லாமே

    முடிவில் ஓரிடத்தில் ...

    ReplyDelete
  9. @ வால்பையன்
    //ஏன், இதன் பிறகு எழுதல!//

    இல்லைங்க நான் இந்த அளவுக்கு யோசிச்சதே அதிகம்..வருகைக்கு நன்றி..

    @ vivek
    //pramatham , niraya eluthungal .//

    நன்றி விவேக்..கண்டிப்பா முயற்சி பண்ணுறேன்.

    @ கார்க்கி
    //நல்லா வந்திருக்குங்க//

    நன்றி கார்க்கி.

    @ தராசு
    //கலக்கல்,
    தொடருங்கள், நிறைய எழுதுங்கள்//

    நன்றி தராசு வருகைக்கு..

    @ SUBBU
    //நல்லா இருக்கு//

    நன்றி சுப்பு..

    @ shakthi kumar
    //வில்வையின் இச்சை அடங்கமால் சிரிக்குமாம் கடல்//

    நன்றி சக்திகுமார் வருகைக்கு..
    வில்வைக்கு வன்மம் அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்குன்னு நினைக்கிறேன்..
    நானும் கொஞ்சம் புதுசு தாங்க தப்பு இருந்த மன்னிச்சிக்குங்க..:)

    @ நட்புடன் ஜமால்..

    //வில்வை மட்டுமா
    இச்சை கொண்டுள்ளே எல்லாமே
    முடிவில் ஓரிடத்தில் ..//

    நன்றி ஜமால் வருகைக்கு.

    ReplyDelete
  10. தன் மீது வான் மழை தூவி
    வலம் வருகிறாள் மழை நங்கை
    என்று பூரிப்புடன் முகம் காட்டும் பூமி.

    arumai

    ReplyDelete
  11. நல்ல இருக்குங்க. தொடர்ந்து எழுதுங்க....

    ReplyDelete
  12. உங்கள் முதல் பதிவிலேயே அசத்திட்டிங்க.....

    கவிதை அருமை தொடருங்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. @ Sukumar swaminathan..

    நன்றி சார்.கண்டிப்பா தொடர்ந்து எழுத வேண்டும் என்று தான் ஆசை.


    @ Chantru..

    நன்றி சந்த்ரு.தொடர்ந்து எழுத கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  14. அன்பு நண்பரே!!
    வருக!!

    ReplyDelete
  15. பிளாக்கர் உலகில் இன்னொரு கவிதாயினியா..
    மேலும்பல படைப்புகள் படைத்து சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. இவங்க பாரதி கண்ட புதுமைப்பெண்களில் ஒருவரோ.......

    வலையுலக கவிஞர் பெருமக்களில் இவளும் ஒரு

    நாள் வருவாள் அரசியாக.......

    ReplyDelete
  17. நம்ம பக்கமும் வந்து பாருங்க......
    பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க......

    ReplyDelete
  18. தொடருங்கள் ஆரம்பமே அசத்தலாக இருக்கு

    ReplyDelete
  19. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  20. @ தேவன் மாயம்

    நன்றி தேவன்மயம்

    @ சுரேஷ் குமார்

    நன்றி சுரேஷ்.
    நான் அந்த அளவுக்கு கவிதை எழுதுபவள் அல்ல.
    ஒரு முயற்சி தான் இது.

    @ பிரியமுடன்.........வசந்த்

    நன்றி வசந்த்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    @ சந்ரு

    நன்றி சந்த்ரு.

    @ பிரபா

    வருகைக்கு நன்றி பிரபா.

    @ பாசகி

    நன்றி பாசகி.

    @ sgramesh

    நன்றி ரமேஷ்

    ReplyDelete
  21. உங்களின் தமிழ் அருமை. அதிகபட்ச உவமைகளுடன் பின்னிட்டிங்க,.. ஏன் அதுக்கப்புறம் வேறு எதுவும் பதிவில்லை??

    ReplyDelete
  22. //யாழ் மீட்டும் இசையோடு செவ்வானில் //

    aarambame asaththal.........

    //மழை விட்டு பிரிந்தும்
    வன்மம் மாறாத பிரபஞ்சம் //

    Super

    //கடைசியில் சேரப்போவது இங்கு தான் என்று
    வில்வையின் இச்சை அடங்கமால் சிரிக்குமாம் கடல்..//

    நல்ல முடிவு......

    இனனும் நிறைய எழுதுங்கள்.....

    இங்கேயும் வந்து பாருங்கள்...

    www.edakumadaku.blogspot.com

    www.jokkiri.blogspot.com

    ReplyDelete
  23. Hmmmmmm.. yennamo solreenga.. nallaathaan irukku .. vaazthukkal

    ReplyDelete
  24. நன்றாகத்தான் எழுதியிருக்கின்றீர்கள்.

    ஏன் ஒரே கவிதையோடு நிறுத்திவிட்டீர்கள்?

    ReplyDelete
  25. hi ranjitha, neenga muyarchi chenjatha sonna athu miga periya poi.neenga ithuvaraikum thiraimarai kavithaayini yaaga irunthinga
    ipo thiraiya vilakkitu valaikkavithaayini yaa maaritinga.

    unga kavithai miga miga arumai,vaazthukkal.

    vaarathil oru naal oru mani neram oru kavithainnu podunga(unga kittenthu innum romba ethirpakuren)apram practice aagidum

    kavithozhan
    http://kavithozhan.blogspot.com

    ReplyDelete