
யாழ் மீட்டும் இசையோடு செவ்வானில்
உலவும் மின்னல் மேகத்தில்
தாவி திரியும் ஒளியின் ஊற்றோடு
இன்று தன்னை விட்டு பிரிகின்ற
ஒரு நீர்த்துளியின் வன்மம் கண்டு
பிரபஞ்சத்தின் ஒரு மூலையில்
அழுகையாய் தொடங்கும் மழை..
மழை விட்டு பிரிந்தும்
வன்மம் மாறாத பிரபஞ்சம்
தன் அங்கத்தின் தக்கையாம் பூமியின் கோளத்தில்
இன்றும் சில நேரம் குரோதம் காட்டும் இயற்கையின் பேரழிவால்..
தன் மீது வான் மழை தூவி
வலம் வருகிறாள் மழை நங்கை
என்று பூரிப்புடன் முகம் காட்டும் பூமி..
கடைசியில் சேரப்போவது இங்கு தான் என்று
வில்வையின் இச்சை அடங்கமால் சிரிக்குமாம் கடல்..